பொதுவாக கோடை காலம் வந்தாலே மின் தட்டுப்பாடு காரணமாக அடிக்கடி மின்தடை ஏற்படும். இதனால் மக்கள் அதிகமாக சிரமப்படுவார்கள்.  அதிக வெயிலினால் ஏற்படுத்தும் வெக்கையும், புழுக்கமும் நம்மை அச்சுறுத்தும். தமிழ்நாட்டில் கோடைக்காலத்தில் ஏற்படும் மின் தட்டுப்பாட்டை தடுக்க ஒரு யூனிட் மின்சாரம் 8.50க்கு வாங்க ஒப்பந்தம் போடப்பட்டிருப்பதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தற்போதைய மின் தேவை 16,500 மெகா வாட் முதல் 17,500 மெகா வாட் வரை உள்ளது.

கோடையில் இது 18,500 மெகா வாட்-ஆக அதிகரிக்கலாம். அதனை ஈடு செய்ய தனியாரிடம் இருந்து கூடுதல் மின்சாரம் வாங்கப்பட இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக கோடைக் காலத்தில் மின் தட்டுப்பாட்டை சரிசெய்யும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இந்த ஆண்டு கோடையில் எந்த மின் தட்டுப்பாடும் ஏற்படாது என்று கூறியது குறிப்பிடத்தக்கது.