கோடை காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது எனவே கோடை விடுமுறைக்கான திட்டமிடுதல் இப்போதே தொடங்கி இருப்போம். இந்த நிலையில் தமிழக அரசு சார்பாக பல சுற்றுலா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை  வாலாஜா சாலையில் உள்ள சுற்றுலா வளர்ச்சி கூட்ட அரங்கில் சுற்றுலா வளர்ச்சிக்காக அலுவலர்களின் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசி அமைச்சர் ராமச்சந்திரன், முதல்வர் நடவடிக்கையால் இந்தியாவில் தமிழ்நாடு அளவில் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் இருக்கும் முன்னணி சுற்றுலா தளமாக முன்னேறி இருக்கிறது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சார்பாக ஊட்டி. கொடைக்கானல் ஆகிய மலை வாழிடங்களுக்கு சுற்றுலா பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் வரும் கோடை விடுமுறையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சுற்றுலா பயணத் திட்டங்களில் முன்பதிவு செய்து மலைவாழ் இடங்களுக்கும் பிற பகுதிகளுக்கும் பொதுமக்கள் சுற்றுலா மேற்கொள்ள பயணம் பெற வேண்டும்.

ஹோட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள் மாநிலம் முழுவதும் முக்கிய நகரங்களில் குறிப்பாக பேருந்து நிலையத்தில் இருந்து மிக அருகில் உள்ளது.  வெவ்வேறு ஊர்களில் மூன்று நாட்கள் தங்குபவர்கள் , ஒரே ஊரில் மூன்று நாட்களுக்கு தங்குபவர்கள் , மொத்தமாக ஐந்து அறைகள் 10 அறைகள் என முன்பதிவு செய்பவர்கள் ஆகியோருக்கு தள்ளுபடி சலுகைகள் வெவ்வேறு சதவீதத்தில் வழங்கப்பட்டு வருகிறது . மேலும் மூத்த குடிமக்கள், போர் உதவிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு தள்ளுபடி சலுகைகள் உண்டு.

ஒரு நபர் இந்த தள்ளுபடி சலுகைகள் ஒன்றை மட்டும் பெற முடியும். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத்திட்டங்கள் மற்றும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதி அரங்கில் முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் இணைய பக்கத்தில் முன்பதிவு செய்தோ அல்லது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திற்கு நேரில் சென்றோ  முன்பதிவு செய்யலாம்.