ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், உலகின் முன்னணி பந்துவீச்சாளர்கள் சிலர் விக்கெட் எடுக்க முடியாமல் திணறி வருவது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ரா, இந்த சீசனில் இதுவரை விளையாடிய 3 போட்டிகளில் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்தவில்லை என்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் துல்லியமான யார்க்கர் மற்றும் பந்துவீச்சு நுணுக்கங்களுக்குப் பெயர் பெற்ற பும்ரா, விக்கெட் கணக்கைத் தொடங்காமல் இருப்பது அந்த அணிக்கு பின்னடைவாகக் கருதப்படுகிறது. பும்ராவைத் தொடர்ந்து மேலும் சில முக்கிய பந்துவீச்சாளர்களும் இந்த சீசனில் விக்கெட் வீழ்த்த தடுமாறி வருகின்றனர். ரன்களைக் கட்டுப்படுத்துவதில் ஓரளவுக்கு வெற்றி பெற்றாலும், விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணியை நிலைகுலையச் செய்ய அவர்கள் தவறிவிட்டனர்.

இதனால் ஐபிஎல் போன்ற டி20 தொடர்களில் அனுபவமிக்க பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுக்கத் தவறும்போது, அது அணியின் வெற்றி வாய்ப்பை நேரடியாகப் பாதிக்கிறது. இந்த நட்சத்திர வீரர்கள் தங்களது பழைய ஃபார்முக்குத் திரும்பி அடுத்தடுத்த போட்டிகளில் விக்கெட் வேட்டையைத் தொடங்குவார்களா என்பதை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.