
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் அவருடைய கொள்கைகள் குறித்தும், அவர் பேசியது குறித்தும் தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியும் நடிகர் விஜயின் முதல் மாநாடு குறித்து பேசி உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது. நடிகர் விஜய் அவருடைய கட்சி கொள்கைகளை பற்றி பேசியுள்ளார். அது சரியானது தவறா என்பது பற்றி நாம் கருத்து சொல்லக்கூடாது. அது சரியாக இருக்காது என்றார். பின்னர் விஜய் திமுக மற்றும் பாஜகவை விமர்சித்தது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், ஒரு கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் பாஜகவை மறைமுகமாக விமர்சித்த நிலையில் திமுகவை நேரடியாக எதிரி என்று அறிவித்துள்ளார்.
இதில் சரி மற்றும் தவறு என்பது குறித்து நாம் எப்படி கருத்து சொல்ல முடியும். அதிமுகவுக்கு என ஒரு கொள்கை இருக்கிறது. அதேபோன்று விஜயின் கட்சிக்கும் ஒரு கொள்கை இருக்கிறது. ஆனால் கொள்கையை இல்லாத கட்சி என்றால் அது திமுக மற்றும் திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மட்டும் தான். நாங்கள் எல்லோரும் மொத்த கொள்கைகளை கொண்ட கட்சிகள் என்று முதல்வர் ஸ்டாலின் கூறும் நிலையில் அவர்கள் ஏன் தனித்தனி கட்சிகளாக இருக்க வேண்டும். அனைவரும் ஒரே கட்சியாகவே இருந்து விட்டு போகலாமே. எங்களைப் பொறுத்தவரை கூட்டணி வேறு மற்றும் கொள்கை வேறு. எங்கள் கொள்கைப்படி தான் இதுவரை எங்கள் கட்சித் தலைவர்கள் ஆண்டனர். தேர்தல் நேரத்தில் கூட்டணி குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என்று கூறினார்