
நடப்பாண்டில் வெயில் சுட்டெரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில், கொளுத்தும் வெயிலால் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட்டு, அதனால் உயிரிழப்பு நிகழும் என மருத்துவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக 106 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெயில் சுட்டெரிப்பது இதற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.
இதனால் குழந்தைகள், நோயாளிகள், முதியவர்கள் ஆகியோர் பகலில் வெளியில் வருவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அதிக வெப்பநிலை காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். மதிய நேரத்தில் குழந்தைகளையும், முதியோர்களையும் வீட்டை விட்டு தனியே வெளியே அனுப்பாதீர்கள். நீர்சத்து மிகுந்த ஆகாரங்களை உட்கொள்ளவும். பருத்தியிலான ஆடைகளை அணிவது நலம்.