
சமூக வலைதளத்தில் பல்வேறு விதமான வீடியோக்கள் வயலாக வரும் நிலையில் தற்போது மனித நேயத்தை நிரூபிக்கும் விதமாக நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு தெரு நாயை மற்றொரு நாய் கடித்த நிலையில் அதற்கு காயம் ஏற்பட்டது. ஆனால் வாகனம் எதுவும் இல்லாததால் வீட்டு உபகரணங்களை வைத்து இரு சிறுவர்கள் ஒரு ட்ராலி போன்ற உருவாக்கி அதில் நாயை அமர வைத்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
View this post on Instagram
ஒரு சிறுவன் அதனை கயிறு கட்டி தள்ளிய நிலையில் மற்றொரு சிறுவன் அதனை பின்னால் நின்று தள்ளினான். இவர்கள் இருவரும் கொளுத்தும் வெயிலில் சாலையில் நடந்து சென்ற நிலையில் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில் ஏழ்மை நிலையிலும் சிறுவர்களின் செயலை பார்த்து இதுதான் உண்மையான மனித நேயம் என பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும் என்று பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் அவர்களின் விவரங்கள் இதுவரை தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.