அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விடுத்த மிரட்டலுக்கு, கொலம்பியா அதிபர் குஸ்தாவோ பெட்ரோ மிகவும் காட்டமான பதிலடியைக் கொடுத்துள்ளார். வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து வருகிறது.

இதனை தொடர்ந்து லத்தீன் அமெரிக்க நாடுகளில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தச் சூழலில், அமெரிக்காவிற்கு அதிகளவில் கொக்கைன் கடத்தப்படுவதாகக் குற்றம் சாட்டிய டிரம்ப், “வெனிசுலா முடிந்துவிட்டது, அடுத்து கொலம்பியா தான்” என்றும், பெட்ரோவின் ஆட்சி நீண்ட காலம் நீடிக்காது என்றும் எச்சரித்திருந்தார்.

மேலும், கொலம்பியா மீது ராணுவத் தாக்குதல் நடத்துவது சரியானதாக இருக்கும் என்றும் அவர் கருத்துத் தெரிவித்திருந்தார். டிரம்பின் இந்த மிரட்டலுக்குச் சமூக வலைதளத்தில் பதிலளித்த அதிபர் பெட்ரோ, தனது தாய்நாட்டைப் பாதுகாப்பதற்காக மீண்டும் ஆயுதம் ஏந்தத் தயங்க மாட்டேன் என்று அதிரடியாக அறிவித்துள்ளார்.

முன்னாள் கொரில்லா போராளியான அவர், இனி ஒருபோதும் ஆயுதம் ஏந்தப் போவதில்லை என்று முன்பு உறுதி ஏற்றிருந்தாலும், நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அந்த முடிவை மாற்றிக்கொள்ளத் தயார் என்று எச்சரித்துள்ளார்.

இந்நிலையில் அவர்கள் வெனிசுலாவில் நடத்தியது போன்ற தாக்குதலைக் கொலம்பியாவில் நடத்த முயன்றால், அவர்கள்மீது அமெரிக்கா மிக மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.