அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் மாகாணத்தில் ஹன்ஷவர்தனே எஸ் கிக்கேரி (57) என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகி ஸ்வேதா (44) என்ற மனைவியும், 14 வயதில் ஒரு மகனும் மற்றும் மற்றொரு மகனும் இருந்துள்ளனர். இவர் சம்பவ நாளில் தன்னுடைய 14 வயது மகனையும் மனைவியையும் துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துவிட்டு பின்னர் அவரும் தற்கொலை செய்து கொண்டார்.

அந்த நேரத்தில் அவருடைய மற்றொரு மகன் வீட்டில் இல்லாததால் தப்பிவிட்டான். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர்களுடைய மரணத்திற்கான காரணம் சரிவர தெரியவில்லை. இந்நிலையில் உயிரிழந்தவர் கர்நாடக மாநிலம் மண்டியா மாவட்டத்தை சேர்ந்தவர். இவர் ஒரு தொழில்நுட்ப வல்லுனராக இருந்த நிலையில் மைசூரில் ரோபோடிக்ஸ் ஸ்டார்ட் அப் நிறுவனத்தை நடத்தி வந்த நிலையில் அவருடைய மனைவி ஸ்வேதா இந்த நிறுவனத்தை இணை நிறுவனராக இருந்தார்.

இவர் அமெரிக்காவிலிருந்து கடந்த 2017 ஆம் ஆண்டு இந்தியா திரும்பி இந்த நிறுவனத்தை தொடங்கிய நிலையில் கொரோனா காலகட்டத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் பின்னர் நிறுவனத்தை மூடிவிட்டு மீண்டும் அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். இவர் அங்கு ஒரு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தில் பணிபுரிந்ததாக கூறப்படுகிறது. மேலும் இவருடைய திடீர் தற்கொலைக்கான காரணம் குறித்து தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.