தமிழக வெற்றிக்கழகம் என்ற அரசியல் கட்சியினை கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அந்த கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கை என்பது நடைபெற்று வரும் நிலையில் ஒரு கோடி உறுப்பினர்களை எட்டியுள்ளதாக தகவல் வெளிவந்தது. இந்நிலையில் பெஞ்சல் புயல் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழைக்கொட்டி தீர்த்தது. இந்த புயல் கரையை கடந்த நிலையிலும் தற்போது புதுச்சேரி அருகே நகராமல் மையம் கொண்டுள்ளது. இதன் காரணமாக இன்றும்‌ தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வெள்ளநீர் சூழ்நிலையில் அதனை அகற்றும் பணியில் அரசு தீவிரமாக இறங்கியுள்ளது. இந்நிலையில் நேற்று கொட்டும் மழையிலும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் தமிழக வெற்றி கழகத்தினர் களத்தில் இறங்கி பொதுமக்களுக்கு உதவி செய்துள்ளனர்.

அதன்படி சென்னையில் மழை நீர் தேங்கிய பகுதிகளில் குறிப்பாக சோழிங்கநல்லூரில் தமிழக வெற்றி கழகத்தினர் களத்தில் இறங்கி மக்களுக்கு உதவி செய்தனர். இதேபோன்று தியாகராய நகர் பகுதியில் பொதுமக்களுக்கு பிரட் மற்றும் பால் பாக்கெட் போன்ற அத்தியாவசியமான பொருட்களை விநியோகித்தனர். இதேபோன்று சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பொதுமக்களுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் பால் பாக்கெட், பிரெட் உள்ளிட்ட அத்யாவசியமான பொருட்களை வழங்கினர். அதன் பிறகு ஒருவர் மழை பெய்யும் போது சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் அங்கு நின்று வாகன ஓட்டிகளுக்கு உதவி செய்ததோடு ஒரு ஸ்கூட்டி ஒன்று பழுதான நிலையில் அதனை அவர் சரி செய்து அந்த குடும்பத்தினரை பத்திரமாக ஏற்றி வைத்தார். மேலும் சாலைகளில் மழைநீர் வடியும் வண்ணம் அவர் செய்தார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரல் ஆகி வருகிறது.