ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் 100 கங்காருகளை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் 43 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர்தான் கங்காருகளை சுட்டு கொலை செய்துள்ளார். கடந்த அக்டோபர் மாதம் 8-ம் தேதி காமன்வெல்த் பகுதியில் மொத்தம் 98 கங்காருகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் அருகே துப்பாக்கி தோட்டக்கள்  மற்றும் வெடி மருந்து பெட்டிகள் போன்றவைகளும் கைப்பற்றப்பட்டது. மேலும் இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில் தற்போது 43 வயது மதிக்கத்தக்க ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் விசாரணை நடைபெறுகிறது.