உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சச்சின் சிங். 26 வயதான இவர் டிகிரி முடித்துவிட்டு மும்பையில் மார்க்கெட்டிங் வேலை செய்து வந்துள்ளார். இதற்கிடையில் கடந்த 2016 ஆம் வருடம் மும்பை புறநகர் ரயிலில் இருந்து கீழே விழுந்த இவர் இரண்டு கால்களையும் இழந்து விட்டதால் மார்க்கெட்டிங் வேலை பறிபோனது. இதனால் சொந்த ஊருக்கு திரும்பிய சச்சின் சிம் கார்டு விற்பனையாளராகவும், ஹோட்டல் ஒன்றில் உணவு டெலிவரி செய்பவராகவும் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று சச்சின் இரவு தன்னுடைய மூன்று சக்கர சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆமைக்குஞ்சு நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. சச்சின் ஏதாவது வாகனம் வந்து ஆமை அடிபட்டு விடும் என்று கருதி ஆமையை சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளத்தில் விட்டு விட்டு வந்துள்ளார். சைக்கிளில் அவ்வளவு தூரம் சென்றதால் அவருக்கு தண்ணீர் தாகம் எடுத்துள்ளது. இதனை அடுத்து அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் சச்சின் தண்ணீர் கேட்டிருக்கிறார்.

இதனால் கோபம் அடைந்த அவர்கள் எவ்வளவு தைரியம் இருந்தால் எங்களிடமே வந்து தண்ணீர் கேட்பாய் என்று கேட்டு சரா மாறியாக தாக்கியுள்ளனர். கால் இல்லாதவர் என்ற ஒரு இரக்கம் கூட இல்லாமல் இருவரும் சேர்ந்து அவரை முகத்திலும் உடம்பிலும் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது பெரும் வைரலானதையடுத்து சச்சினை தாக்கிய அந்த இரண்டு காவல்துறையினரையும் டிஸ்மிஸ் செய்துள்ளனர்.