வந்தவாசி தாலுகா கல்யாணி புரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சுதாகர் இவரது மனைவி ரம்யா. கூலி வேலை செய்து வந்த சுதாகர் விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் சீனு வளவனுடன் சேர்ந்து அவ்வபோது மது அருந்துவது வழக்கம். இந்த நிலையில் பையூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவர் கல்யாணபுரம் பகுதியில் வாடகை வீட்டில் தங்கி வைக்கோல் சுற்றும் இயந்திரத்தை வாடகைக்கு விட்டு வந்துள்ளார். இந்த நிலையில் பெருமாளுக்கும் சுதாகரனின் மனைவி ரம்யாவுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. இதனை அறிந்த சுதாகர் தனது மனைவியை கண்டித்துள்ளார். மேலும் பெருமாளை கண்டிக்குமாறு சீனு வளவனிடம் கூறியுள்ளார். ஆனால் சீனு வளவன் பெருமாளுடன் நட்பாக பேசியுள்ளார்.

இதனால் சுதாகர் தனது மனைவியிடம் பெருமாள் உடனான உறவை கைவிடுமாறு அடிக்கடி கண்டித்ததால் தகராறு ஏற்பட்டது. இதனால் சுதாகரை கொலை செய்ய திட்டமிட்டு ரம்யாவும் பெருமாளும் சீனு வளவனை உதவிக்கு அழைத்துள்ளனர். கடந்த 17ஆம் தேதி சீனுவளவன் சுதாகரை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்துள்ளார். அதன் பிறகு ஆழியூர் கிராமத்தில் இருக்கும் தேக்கு தோப்பிற்கு அழைத்துச் சென்று விஷம் கலந்த மதுவை கொடுத்து சுதாகரை குடிக்க வைத்ததால் வாயில் நுரை தள்ளியபடி சுதாகர் சடலமாக கிடந்தார். மது குடித்ததால்தான் சுதாகர் இறந்ததாக நினைத்து உறவினர்கள் அவரது உடலை புதைத்து விட்டனர்.

ஆனால் சீனுவளவன் இறுதி சடங்கிற்கு வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் இது பற்றி கேட்டதால் மறுநாள் சீனுவளவன் மாலை அணிந்து கொண்டு மாரியம்மன் கோவிலில் தங்கினார். அதன் பிறகு 19ஆம் தேதி கோழி புலியூர் தோப்பில் இருக்கும் மரத்தில் சீனி வளவன் சடலமாக கிடந்தார். சீனு வளவனை யாரோ கொலை செய்து விட்டதாக கூறி அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தியதில் ரம்யாவும் பெரும்பாலும் இணைந்து சீனு வல்லவன் உதவியுடன் சுதாகரை கொலை செய்தது உறுதியானது. இருவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.