பெங்களூரில் கடந்த 22ஆம் தேதி மிக கனமழை பெய்தது. ஏற்கனவே பெங்களூருவில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழையால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கியுள்ளது. இது பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பெங்களூரில் நடந்த ஒரு சம்பவம் குறித்த வீடியோ வெளியாகி பேசும் பொருளாக மாறி உள்ளது.

அதாவது அல்லல்ல சான்ட்றா மற்றும் எலஹங்கா பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தது. இந்த தண்ணீரில் அங்குள்ள பொதுமக்கள் சிலர் மீன்களை வலை விரித்து பிடித்து சென்றனர். மேலும் இது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.