திருச்சி பெரியார் நகரில் அமைந்துள்ள முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் நேர்முக உதவியாளர் (PA) மணிகண்டன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) அதிகாரிகள் இன்று திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

​கடந்த ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்தில் வழங்கப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. சோதனை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், டெண்டர் தொடர்பான முக்கிய ஆவணங்கள் மற்றும் கோப்புகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

​முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்குச் சொந்தமான இடங்கள் மற்றும் அவரது தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில், அவரது நேர்முக உதவியாளரான மணிகண்டன் வீட்டிலும் இந்த அதிரடிச் சோதனை நடைபெற்று வருவது திருச்சி மற்றும் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.