
இந்தியாவில் மக்கள் அதிக அளவு சிலிண்டர் பயன்படுத்த தொடங்கிவிட்டனர். ஏழை எளிய மக்களுக்கும் அரசு மானிய விலையில் சிலிண்டர் வழங்கி வருவதால் மக்கள் மத்தியில் சிலிண்டர் பயன்பாடு அதிகரித்து விட்டது. இந்த நிலையில் சிலிண்டர்களுக்கான கியூ ஆர் குறியீடு எரிவாயு சிலிண்டர்கள் விதிகள் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த கியூ ஆர் கோடை இனி ஸ்கேன் செய்தால் மட்டுமே சிலிண்டர் வாங்க முடியும். சிலிண்டர் திருட்டை தடுக்க இந்த முறை அமல்படுத்தப்பட உள்ளது. அதேபோல வீட்டு சிலிண்டர்களை கடைகளில் பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளது. கியூ ஆர் கோடு காரணமாக வீடுகளுக்கு இனி கேஸ் சிலிண்டர் வாங்கும் முறை மொத்தமாக மாறப்போகிறது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.