பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவச சமையல் சிலிண்டர்களை மத்திய அரசு வழங்கி வருகிறது .அதுபோக 12 சிலிண்டர்களுக்கு மானியமாக 300 ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இலவசமாக மற்றும் மானிய விலையில் சிலிண்டர்களை பெறுவதில் பல முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. இதனை தவிர்க்கும் விதமாக கேஸ் இணைப்போடு ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவு செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதனால் கேஸ் இணைப்போடு ஆதார் எண் மற்றும் கைரேகை இணைப்பதற்கு பொதுமக்கள் கேஸ் ஏஜென்சிகளில் திரண்டு இருக்கிறார்கள். இவ்வாறு கேஸ் இணைப்போடு ஆதார் எண் மற்றும் கைரேகை பதிவை இணைப்பதால் ஒருவருக்கு எத்தனை கேஸ் இணைப்புகள் இருக்கிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இதன் மூலமாக கேஸ் இணைப்புகள் பெறுவதில் முறைகேடுகளை தடுக்கலாம்.