அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உயர் மருத்துவ சிகிச்சை இலவசமாக பெறுவதற்கு முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அது மட்டுமின்றி மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டமும் இதோடு இணைந்து செயல்படுத்தப்பட்டுள்ளது. இதில் ஆண்டு வருமானம் 1.20 லட்சம் ரூபாய் வரை இருப்பவர்கள் பயன்பெறலாம். இந்த காப்பீடு அட்டை வைத்திருப்பவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு வருடத்திற்கு 5 லட்சம் ரூபாய் வரை உயர் மருத்துவ சிகிச்சை வழங்கப்படும்.

வருமான சான்று மற்றும் ஆதார் கார்டு, ரேஷன் கார்டு நகல் போன்றவை தேவை.  ஆனால் மகளிர் உரிமை தொகை திட்டம் காரணமாக புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் ரேஷன் கார்டு இல்லாமல் முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டது. எனவே மக்களுடைய நலன் கருதி புதிய ரேஷன் கார்டு உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.