தமிழகத்தில் ஆவின் நிறுவனத்தின் மூலமாக பால், தயிர், வெண்ணெய், பன்னீர் போன்ற அனைத்து பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சமீப காலமாக ஆவின் பொருள்களுக்கான விலை அதிக அளவு உயர்த்தப்பட்டு வருவதாக மக்கள் மத்தியில் அதிருப்தி எழுந்துள்ளது. ஆனால் விவசாயிகளுடைய நலனை கருத்தில் கொண்டு பால் கொள்முதல் விலை உயர்த்தப்படுவதை ஈடு செய்வதற்காகவே ஆவின் பொருள்களின் விலை உயர்த்தப்படுவதாக அரசு கூறி வருகிறது.

இந்த நிலையில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகைகளையும் முன்னிட்டு மதுரை ஆவின் நிர்வாகம் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி ஒரு லிட்டர் ஆவின் நெய் ரூ.700 க்கு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் தற்போது ரூ.50 தள்ளுபடி செய்யப்பட்டு ஒரு லிட்டர் ஆவின் நெய் 650 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது ஆவின் பொருள்களின் விலை உயர்வு காரணமாக அதிரத்தில் இருக்கும் மக்களை சமாதானம் செய்வதற்காக தான் ஆவின் நெய் விலை குறைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.