இந்தியாவுடனான பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் தனது ராணுவத்தை எல்லைப் பகுதியில் குவித்து வருகிறது. கடற்படை, விமானப்படை மற்றும் தரைப்படை அனைத்தையும் ஒரே நேரத்தில் முன்னணி பகுதிகளில் நிறுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இது  இந்திய தாக்குதல்களை எதிர்கொள்வதற்கு  பாகிஸ்தான் உறுதியோடு இருக்கிறது என்று கூறலாம்.  ஆனால் உள்நாட்டு பாதுகாப்பு கேள்விக்குறியாகி விட்டதாக முன்னாள் உள்துறை அமைச்சர் மற்றும் ஜமியத் உலமா-இ-இஸ்லாம்-எஃப் தலைவர் ஃபஸ்லூர் ரஹ்மான் கவலை தெரிவித்துள்ளார்.

“போர் நேரத்தில் பிக்பாக்கெட்டுகள் யார் கவனிப்பார்கள்?” “இப்போது எல்லைப் பாதுகாப்புக்காக படைகளை முன்னணியில் நிறுத்துவது போலிருக்கிறது. ஆனால் உங்கள் வீட்டு கதவை யார் பாதுகாப்பார்கள்? உங்கள் தெருவை யார் கண்காணிப்பார்கள்?” என்றார் ஃபஸ்லூர் ரஹ்மான். கராச்சி உள்ளிட்ட நகரங்களில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றங்கள் அதிகரிக்க, பலுசிஸ்தானில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் பயங்கரவாதிகளால் பாதுகாப்பு சவாலுக்கு உள்ளாகி வருவது உண்மையென அவர் எச்சரிக்கை செய்தார்.

இந்நிலையில், நாட்டின் உள்நிலை பாதுகாப்பு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை எனவும், போர் நிலைமை பற்றி ஒட்டுமொத்த அமைச்சரவையையும் அறிவிக்காதது கண்டிக்கத்தக்கது எனவும் ஃபஸ்லூர் ரஹ்மான் கடும் விமர்சனம் தெரிவித்தார். “இது போன்ற நேரத்தில் ஒரு உயர் மட்ட கூட்டத்தில் பிரதமரும் மூத்த தலைவர்களும் பங்கேற்கவில்லை என்பது பாகிஸ்தானின் தீர்மானத் தளர்வை காட்டுகிறது” என கூறினார்.

மக்களிடையே பதற்றம் உச்ச நிலைக்குச் சென்றுள்ள இந்த தருணத்தில், பொதுமக்களிடையே பெரும் குழப்பமும் நிலவுகிறது. போர் தள்ளி வைத்தாலும், உள்நாட்டுக் குழப்பங்கள் மற்றும் குற்றவாளிகளால் ஏற்படும் பாதிப்பு பாகிஸ்தானை சிக்கலில் ஆழ்த்தக்கூடும் என மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர்.