
மக்களவைத் தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிட்ட அண்ணாமலை, திமுக வேட்பாளரும், முன்னாள் மேயருமான கணபதி ராஜ்குமாரிடம் தோல்வியடைந்தார். இதேபோல் தமிழகத்தில் பாஜக போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதனால் தமிழ்நாட்டு பாஜக டெபாசிட் இழக்கும் நிலை உருவாகியுள்ளது.
முன்னதாக தேர்தலில் வென்று அண்ணாமலை மத்திய அமைச்சராகலாம் எனக் கூறப்பட்ட நிலையில், இந்தத் தோல்வி அவரது கட்சிப் பதவிக்கு சிக்கலை ஏற்படுத்தியிருப்பதாக பரவலாகக் கூறப்படுகிறது.