கேரளாவில் ஒன்பது மாவட்டங்களுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகின்றது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்து வருகிறது.

கனமழை காரணமாக கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 282 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்திற்கு எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர், பாலக்காடு, கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு, காசர்கோடு உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.