தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து நேற்று அவரது மகன் விஜய பிரபாகரன் செய்தியாளர்களிடம், ‘கேப்டனின் உடல்நிலை சற்று பின்னடைவுதான். ஆனால் அவர் நன்றாக இருக்கிறார். அவர் நூறு வயது வரை நன்றாக இருப்பார்’ என கூறியிருந்தார். இது பற்றி பல்வேறு யூகங்களில் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இந்த நிலையில், இதுகுறித்து ட்வீட் செய்துள்ள விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன், ‘கேப்டன் உடல்நிலை நல்ல ஆரோக்கியமாகவும் இருக்கிறது. தயவு செய்து யாரும் வதந்திகளை நம்ப வேண்டாம். ஊடகங்கள் தவறான தலைப்பில் சித்தரிக்கிறது. கட்சியினர் ரசிகர்கள் கவலைப்பட வேண்டாம். ஆகஸ்ட் 25ஆம் தேதி கேப்டன் பிறந்தநாளை பிரமாண்டமாகக் கொண்டாடலாம்’ என குறிப்பிட்டுள்ளார்.