தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் அரசியல் வருகை குறித்துப் பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியலுக்கு வந்தபோது ஏற்படுத்திய தாக்கத்தை விட, நடிகர் விஜய் மிகப்பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்துவார். ஒரு கட்சியின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் சக்தியாக அவர் இருப்பார்” எனத் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த்தைவிட பெரும் பாதிப்பை உண்டாக்குவார் விஜய் – டிடிவி தினகரன்#TTVDhinakaran | #Vijay | #TVK |#AMMK | #Vijayakanth pic.twitter.com/TXGUW6Pmxe
— PttvOnlinenews (@PttvNewsX) February 15, 2026
“>
2006 தேர்தலில் விஜயகாந்த் கணிசமான வாக்குகளைப் பிரித்து பல கட்சிகளின் வெற்றியைப் பாதித்ததைப் போல, வரும் 2026 தேர்தலில் விஜய்யின் தவெக மிகப்பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என அவர் கணித்துள்ளார்.
