
தருமபுரி மாவட்டம் மதிக்கோண்பாளையம் எனும் பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வந்துள்ளார். அந்தப் பகுதியில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அமைக்கப்பட இருந்தது. இதனால் பெருமாள் அவருடைய நிலத்தை தானமாக அதற்க்கு வழங்கினார். மேலும் பெருமாள் தனது தம்பி முனியப்பன் என்பவருக்கு சொத்தில் சரி பாதி கொடுத்துள்ளார்.
இதில் முனியப்பனுக்கு மணி என்ற மகன் இருக்கிறார். இவர் அடிக்கடி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கதிற்கு சென்று பணிபுரியும் ஊழியர்களிடம் இது எங்களுடைய இடம் நீங்கள் காலி செய்யுங்கள் என்று தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று அவர் கூட்டுறவு கடன் சங்கத்திற்கு சென்றார். பின்னர் அவர் அங்கு பணிபுரியும் அருள் எனும் ஊழியரை ஆயுதங்களால் தாக்கியுள்ளார்.
மேலும் அவர் அருகிலிருந்த ஊழியர்களையும் ஆயுதங்களால் தாக்கினார். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மணியை கைது செய்தனர். பின்பு காவல்துறையினர் காயமடைந்த 4 பேரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் காவல்துறையினர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.