உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் மாவட்டத்தில் உள்ள மங்களூர் பகுதியில் காரில் வந்தவர்களை சிலர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவத்தின் போது, பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஒரு குடும்பத்தை ஏற்றிச் சென்ற கார், புனித யாத்திரையில் பங்கேற்றுக் கொண்டிருந்த சிலர்  மீது தவறுதலாக மோதியதாக கூறப்படுகிறது. உடனே அவர்கள் காரில் இருந்தவர்களை தாக்க முயன்றனர்.

சமூக ஊடகங்களில் வெளியாகிய காணொளிகளில், அந்த குழுவினர் வாகனத்தை சுற்றி வளைத்து பயணிகளை வண்டியிலிருந்து வலுக்கட்டாயமாக இறக்க முயல்வதை, பின்னர் காரின் கதவுகள் உடைக்கப்பட்டு, ஆண் பயணிகள் மிரட்டி, தாக்கப்பட்டதையும் காணலாம். இந்த தாக்குதலில் கார் முற்றிலும் சேதமடைந்தது.

இந்த வீடியோ பரவலாக வைரலானதை அடுத்து, ஹரித்வார் மாவட்ட காவல்துறை மங்களூர் காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது பதிவு செய்துள்ளது. அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட அறிக்கையில், “காருடன் ஏற்பட்ட மோதலில் வாகனத்தை சேதப்படுத்தியதோடு, பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளனர். இது தொடர்பாக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது,” என தெரிவித்துள்ளனர்.