மதுபானங்கள் மற்றும் பீர் வகைகளை அரசு நிர்ணயித்த விலையைவிட கூடுதல் விலைக்கு விற்கும் பணியாளர் நிரந்தர பணி நீக்கம் செய்யப்படுவார்கள் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், மேற்பார்வையாளர்கள் மதியம் 12 முதல் இரவு 10 மணி வரை இருக்க வேண்டும் எனவும் டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியான அறிக்கையில், கூடுதல் விலை விற்பனை ஏதும் செய்யக்கூடாது. அவ்வாறு கூடுதல் விலை விற்பனை ரூ.10 கண்டறியப்படும் பட்சத்தில் விற்பனை செய்த கடை விற்பனையாளர் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.