
தமிழகத்தில் இன்று தைப்பூச திருநாளை முன்னிட்டு அரசு விடுமுறை. முருகப்பெருமானுக்கு உகந்த நாளான இன்று ஏராளமான பக்தர்கள் பிரசித்தி பெற்ற முருகன் கோவிலுக்கு செல்வார்கள். ஏராளமான பக்தர்கள் பழனி மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட இடங்களுக்கு நடந்தும் செல்வார்கள். ஒவ்வொரு வருடமும் தைப்பூசத் திருநாள் அன்று அரசு விடுமுறை வழங்கப்படும்.
மேலும் அந்த வகையில் இந்த வருடமும் தைப்பூசத்தை முன்னிட்டு அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அரசு நிறுவனங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகள் போன்றவைகள் செயல்படாது.