சேலம் மாவட்டத்தின் புகழ்பெற்ற கோட்டை மாரியம்மன் கோயில் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, இன்று ஆகஸ்ட் 6ஆம் தேதி (புதன்கிழமை) மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஈடுசெய்யும் வகையில், ஆகஸ்ட் 23ஆம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் இயங்கும் பணி நாளாக மாற்றப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆனால் இந்த விடுமுறை Negotiable Instrument Act, 1881 கீழ் வராததால், அவசர பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிக்காக தேவையான அரசுப் பணியாளர்கள் மட்டும் பணியில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள சங்கர நாராயணர் கோயிலில் நடைபெறும் ஆடித்தபசு திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 7ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவில் மக்கள் அதிகமாக பங்கேற்கும் காரணத்தால், இந்த விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
