தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூர் ஆகிய இரு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அதாவது தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் குடமுழக்கு விழா இன்று. இதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சாமி  தரிசனம் செய்வதற்காக வருவார்கள். இதன் காரணமாக இன்று மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை வழங்கியுள்ளார்.

அதன் பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை பகுதியில் பூதப்பாண்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற சிவகாமி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு இன்று மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறை வழங்கி உள்ளார். மேலும் இதன் காரணமாக இன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் என எதுவும் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது