கேரள மாநிலத்தில் உள்ள திருவனந்தபுரம் அருகே வசித்து வரும் ஒரு சிறுமி 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவியை 11ஆம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவன் காதலித்து வந்துள்ளான். இந்த மாணவனின் காதலை மாணவி ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் மாணவன் தொடர்ந்து மாணவியை ஒருதலையாக காதலித்து வந்தான்.

இந்நிலையில் அந்த மாணவன் மாணவியை மிரட்டி எப்படியாவது காதலிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்து ஆனந்து (20), சஜின் (30) ஆகிய இருவரின் உதவியையும் நாடினார். இவர்களிடம் அந்த மாணவி தன்னை காதலித்தால் மதுபானம் மற்றும் பிடித்த உணவுகளை வாங்கி தருவதாக கூறியுள்ளான்.

இதனால் அந்த வாலிபர்கள் இருவரும் மாணவியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு மாணவனை காதலிக்கு வற் வற்புறுத்தியதோடு அந்த மாணவியின் தாயிடம் மாணவியின் தாயிடம் உங்கள் மகளை அந்த மாணவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர். இது தொடர்பாக மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கவே வாலிபர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.