நாடு முழுவதும் அரசு அலுவலகங்களில் பணிக்கு வருவோர் பணி நேரத்தில் தங்களுடைய குழந்தைகளை பராமரித்துக் கொள்ள குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் செயல்பட்டு வருகிறது. இந்த மையங்களை அமைக்க வழிகாட்டு விதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்தியாவில் குழந்தை பராமரிப்பு மையங்களில் உணவு ஊட்டும் வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி அமைக்கப்பட வேண்டும். மருத்துவ முதலுதவி, தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு வசதி, கண்காணிப்பு கேமரா மற்றும் குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத விளையாட்டு உபகரணங்கள் நிறுவப்படுவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.