
மும்பையை சேர்ந்த காமெடியன் வி ஸ்ரீதர் சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ஆரம்பப் பள்ளியில் குழந்தையை சேர்க்க விண்ணப்ப படிவத்தில் கேட்கப்பட்டிருந்த கேள்வியைப் பற்றிய பதிவுதான் அது. பள்ளியில் சேர்க்கப்படும் குழந்தை எப்படி பிறந்தது என்ற கேள்வி அதாவது எந்த முறையில் குழந்தை பிறந்தது.

சுகப்பிரசவமா? அறுவை சிகிச்சையா? அல்லது குறை பிரசவத்தில் குழந்தை பிறந்ததா? என கேட்டுள்ளனர். இத்தகைய கேள்வி பள்ளியில் சேர்க்கும் போது அவசியம் தானா என்று ஸ்ரீதர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.