
ஈரோடு மாவட்டம் கைகாட்டி வலசு பாரதியார் நகரை சேர்ந்தவர் செந்தமிழ் செல்வன். இவர் ஐ.டி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி லதா. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.
இந்த நிலையில் செந்தமிழ்ச்செல்வன் கடன் வாங்கி பங்கு சந்தையில் முதலீடு செய்துள்ளார். அதில் அவருக்கு பல ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் செந்தமிழ் செல்வன் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
நேற்று முன்தினம் தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சொந்தமின் செல்வன் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் செந்தமிழ் செல்வனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.