இன்றைய காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி வருகிறது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் குறித்த வீடியோக்கள் அதிகளவு பகிரப்பட்டு வருவதால் இதனை ரசிக்க தனி ஒரு ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. பொதுவாகவே குழந்தைகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காது. அவர்கள் விளையாடுவது மற்றும் பேசுவது என சிறு சிறு செயல்கள் கூட காண்போரை மகிழ்விக்கும்.

குழந்தையின் மனம் கடவுளுக்கு சமன் என்பார்கள். காரணம் யார் மீதும் எந்த பயமும் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உண்மையான அன்பை குழந்தைகள் வெளிப்படுத்துவார்கள். இந்த அன்புக்கு மனிதர்கள் மட்டுமல்ல பறவைகள் மற்றும் விலங்குகளும் கூட அடிபணியும். அதன்படி குழந்தை ஒன்றின் அறிவுறுத்தலை கேட்டு அதனை பின்பற்றி வாத்து குஞ்சு சறுக்கல் விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி பலரையும் வியக்க வைத்துள்ளது.