
18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அரசியலில் பயன்படுத்தக் கூடாது என்று அண்ணாமலை பேசியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோவிலில் நேற்று தைப்பூச விழா கொண்டாடப்பட்ட நிலையில், தமிழக பா.ஜக தலைவர் அண்ணாமலை நேற்று இரவு காரில் பழனிக்கு வந்தார். பின்பு அடிவாரத்தில் இருந்து காவடி எடுத்து திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று தரிசனம் செய்தார். அதன்பிறகு பழனி முருகனை நல்லபடியாக தரிசனம் செய்து விட்டு கீழே இறங்கினார். பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, “அரசியல் கட்சியில் 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை சேர்க்கக்கூடாது.
ஆனால் தமிழக வெற்றி கழக கட்சியில் இருப்பது அனைவருமே குழந்தைகள் தானே. அவர்களுக்கு தான் வெளிச்சம். எதற்காக குழந்தைகள் பிரிவு ஆரம்பித்தார்கள் என்று தெரியவில்லை. 18 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை அரசியலில் பயன்படுத்தக் கூடாது என்ற விதிமுறை சட்டம் இருக்கிறது என்று பேசியுள்ளார். எந்த ஒரு அரசியல் கட்சியிலும் இல்லாத நிலையில், குழந்தைகள் அணி உள்ளிட்ட 28 பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.