
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே நேற்று நடந்த ஒரு சாலை விபத்தில் 3 இளைஞர்கள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாக குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் நேற்று தாசரா பண்டிகையை முன்னிட்டு கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாலை அணிந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். அந்த வகையில் நேற்று கொடியேற்று விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.
அந்த வகையில் குலசேகரபட்டினம் கோவில் கொடியேற்று விழாவில் கலந்துகொண்டு லோடு ஆட்டோவில் திருச்செந்தூர் அருகே வாலிபர்கள் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போதே எதிரே வந்த மினி லாரி எதிர்பாராத விதமாக லோடு ஆட்டோவின் மீது மோதியது. இந்த விபத்தில் பெரும்படையான் (20), பெருமாள் (25) மற்றும் வடிவேலு (17) மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.