
இஸ்ரேல் ஹமாஸ் இடையே தொடர்ந்து போர் நீடித்து வரும் நிலையில் ஈரான் அதிபர் எச்சரிக்கை ஒன்றை கொடுத்துள்ளார். அரசு தொலைக்காட்சியில் பேசிய ஈரான் அதிபர் அயதுல்லா அலி காமினி இஸ்ரேல் தொடர்ந்து காசாவில் குற்றங்களை தொடர்ந்து வந்தால் உலகத்தில் இருக்கும் முஸ்லிம்கள் மற்றும் எதிர்ப்பு படைகளை யாராலும் தடுத்து நிறுத்தி விட முடியாது என கூறியுள்ளார். மேலும் காசாவில் நடக்கும் தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.