இந்தியாவில் தற்போது வங்கி கணக்குகளை விட மக்கள் பலரும் அதிக அளவு தபால் நிலைய சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். அதன்படி தபால் அலுவலக தேசிய சேமிப்பு திட்டம் அரசாங்க உதவியுடன் கூடிய சிறுசேமிப்பு திட்டமாகும். இந்த திட்டம் முதலீட்டாளர்களுக்கு நிலையான வட்டி விகிதம் மற்றும் மாத வருமானத்தை வழங்க கூடியது. இதில் குறைந்தபட்சம் ஆயிரம் ரூபாய் முதல் ஒற்றைக் கணக்கில் அதிகபட்சம் ஒன்பது லட்சம் ரூபாய் வரையும் கூட்டு கணக்கில் 15 லட்சம் ரூபாய் வரையும் முதலீடு செய்ய முடியும்.

இந்த திட்டத்தின் கீழ் ஒரு வைப்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை இயக்கலாம் எனவும் அதிகபட்ச தொகையின் உச்சவரம்புக்கு உட்பட்டு இது ஒற்றை அல்லது கூட்டு கணக்கில் முதலீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர்ந்து ஒரு வருடம் ஆன பிறகு முன்னதாகவே கணக்கை மூடலாம். இருந்தாலும் மூன்று வருடங்கள் முடிவடைவதற்குள் வாங்கினால் வைப்புத் தொகையில் இரண்டு சதவீதம் கழிக்கப்படும். இந்த திட்டத்திற்கு 7.4 சதவீதம் வட்டி வழங்கப்படும் எனவும் 15 வயது நிரம்பியவர்கள் சேரலாம்.