சென்னையில் ஆகஸ்ட் மாதம் தொடக்கம் முதல் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்து காணப்பட்ட நிலையில் இன்று கணிசமாக விலை குறைத்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 52,440 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

அதன் பிறகு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 6555 ரூபாயாக இருக்கிறது. இதேபோன்று 18 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 8 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 5370ரூபாய்க்கும், ஒரு சவரன் 64 ரூபாய் வரை குறைந்து 42960 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. மேலும் வெள்ளி விலை 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் 88 ரூபாயாகவும் 1 கிலோ வெள்ளி 88 ஆயிரம் ரூபாய் ஆகவும்  இருக்கிறது.