
தமிழ்நாடு அரசு தேர்வாளர் பணி ஆணையம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது டிஎன்பிஎஸ்சி குரூப் 3 எழுத்து தேர்வு கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிலையில் ஆகஸ்டில் தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில் டிஎன்பிஎஸ்சி குரூப் 3 4-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற இருக்கிறது.
அதாவது 3-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு முடிவடைந்த நிலையில் தற்போது 4-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற இருக்கிறது. மேலும் பிராட்வேயில் உள்ள டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தில் வருகின்ற 23ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.