குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் Dipak Thakor தனது நண்பர்களுடன் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த குரங்கு ஒன்று தீபக்கை கடுமையாக தாக்கியுள்ளது.

இதில் காயமடைந்த தீபக்கை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாக்குதலில் சிறுவனின் குடல் வெளியில் எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதே கிராமத்தில் இது மூன்றாவது முறையாக குரங்கு நடத்திய தாக்குதல் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக வனத்துறை அதிகாரி விஷால் சௌத்ரி கூறுகையில் இரண்டு குரங்குகளை ஏற்கனவே கூண்டு வைத்து பிடித்து விட்டதாகவும் மூன்றாவது குரங்கை பிடிப்பதற்காக கூண்டு கிராமத்தில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.