இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான sbi வங்கியை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வகையான சேவைகளை வழங்கி வருகிறது. அதன்படி பயனர்கள் தங்களுடைய முதிர்வு காலத்தில் பென்ஷனைத் தவிர வேறு வருமானத்தை பெறுவதற்கு எஸ்பிஐ வங்கியின் ஆன்யூட்டி  டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் பயனர்கள் தங்களுடைய முதலீட்டை மொத்தமாக செலுத்த வேண்டும். அதாவது 120 மாதங்களுக்கு குறைந்தபட்சம் மாதாந்திர ஆண்டு தொகையாக ஆயிரம் ரூபாய் வரை நீங்கள் முதலீடு செய்யலாம்.

அவ்வாறு செய்தால் ஒவ்வொரு மாதமும் உங்களுக்கு நிலையான வருமானம் கிடைக்கும். அதேசமயம் 15 ஆயிரம் ரூபாய் வரை டெபாசிட்டுகளுக்கு முன்கூட்டி பணத்தை செலுத்தும் வசதியும் இதில் உள்ளது. பயனர்கள் செலுத்தக்கூடிய வைப்புத் தொகைக்கு அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. மேலும் மொத்த ஆண்டு தொகையில் 75 சதவீதம் வரை ஓவர் டிராப்ட் அல்லது கடன் வாங்கிக் கொள்ளும் வசதியும் பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களுக்கு 6.1 சதவீதம், மூத்த குடிமக்களுக்கு 6.9% வட்டி வழங்கப்படுகின்றது.