கும்பம் ராசி அன்பர்களே,

இன்று எதிலும் நியாயமாக நடக்க முயல்வீர்கள் பணியிடத்தில் அதிகாரிகளை மதித்து நடக்க வேண்டும். சில காரியங்களை அற்புதமாக செய்து முடிக்க முடியும். பணவரவு அதிகரித்தாலும் கையிருப்பு குறையும். செய்யும் செயல்களை நிதானமாக செய்யுங்கள். பணியிடத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

வீடு வாகனம் மூலம் செலவு அதிகரிக்கும். சகோதர சகோதரிகளிடம் கவனமாக பேச வேண்டும். எந்த செயலிலும் கவனமாக ஈடுபடுவது நல்லது. சமூகத்தில் மதிப்பும் அந்தஸ்து உயரும். பெண்கள் ஆசைப்பட்ட பொருளை வாங்க முடியும். நேர்மையுடன் நடந்து கொள்ள முடியும். அக்கம் பக்கத்தில் நல்ல பெயர் கிடைக்கும்.

இந்த நாளை இனிய நாளாக கொண்டாட முடியும். இன்று மாணவர்கள் வெற்றி பெற கடுமையாக உழைப்பீர்கள். கல்வியில் சாதிக்க முடியும். சோதனைகளை சாதனைகளாக மாற்றுவீர்கள். முயற்சி செய்தால் வெற்றி சுலபமாகும். இன்று அம்மன் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடக்கு

அதிஷ்ட எண்: 2 மற்றும் 4

அதிர்ஷ்ட நிறம்: பிங்க் மற்றும் ஆரஞ்சு நிறம்