இந்தியாவில் மிக நீண்ட ரயில் பயணம் என்றால் அது கன்னியாகுமரியில் இருந்து அசாம் மாநிலத்தில் உள்ள திப்ரூகருக்கு செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் தான். இந்த வாராந்திர ரயில் 2011 ஆம் ஆண்டு ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 4273 கிலோ மீட்டர் வரை இயக்கப்படுகின்றது. இதற்கான மொத்த பயண நேரம் 80 மணி நேரம் 15 நிமிடங்கள் ஆகும். இந்த வாராந்திர ரயிலை 2020 ஆம் ஆண்டில் இருந்து தினசரி ரயிலாக மாற்றம் செய்து ரயில்வே அறிவித்தது.

அதன்படி 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் வாரத்திற்கு நான்கு நாட்கள் இயங்கி வருகின்றது. நான்கு நாட்கள் செல்லும் இந்த ரயிலை தினசரி ரயிலாக மாற்ற ரயில்வே திட்டமிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் வாரம் 7 நாட்கள் இயங்கும்போது மூன்று நாட்கள் மட்டும் கன்னியாகுமரி டூ சென்னை வழியாக இயக்கலாம் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.