கரூரில் சமீபத்தில் திமுக சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்போது தூய்மை பணியாளர்களை குப்பை வண்டியில் ஏற்றி சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோவை தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பாஜக கட்சியின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் திமுக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், கரூரில் தூய்மை பணியாளர் சகோதர சகோதரிகளை குப்பை வண்டியில் அழைத்துச் சென்று மருத்துவ முகாம் நடத்திய திமுக அரசுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் முன் களப்பணியாளர்களாக பணியாளர்களாக பணியாற்றும் தூய்மை பணியாளர்களை சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் அருகில் இருந்து சாப்பிடுவது போல் போட்டோ சூட் நடத்தி விளம்பரம் செய்து விட்டார். ஆனால் கரூரில் நடைபெற்ற மருத்துவ முகாமில் தூய்மை பணியாளர்களை குப்பை வண்டியில் ஏற்றி சென்றுள்ளனர். மேலும் இது தான் உங்களுடைய திராவிட மாடலா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.