
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் குப்பைத் தொட்டியில் மர்ம பொருள் வெடித்து சிதறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குசாய்குடா பகுதியில் குப்பை தொட்டியில் மர்ம பொருள் வெடித்து 30 அடி உயரத்திற்கு பறந்தது. இதனால் குப்பை தொட்டியை சுத்தம் செய்ய முயன்ற தூய்மை பணியாளரான நாகராஜு என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நாகராஜுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.