சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் பகுதியில் 35 வயதுடைய பெண் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் வீட்டு வேலைகளை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் அதே பகுதியில் வசிக்கும் ராஜேஷ் கண்ணா என்பவர் அடிக்கடி அந்த பெண்ணை பின் தொடர்ந்து சென்று பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். கடந்த 9-ஆம் தேதி அந்த பெண் தான் வேலை பார்க்கும் வீட்டின் வெளியே குப்பைகளை போடுவதற்காக சென்றுள்ளார்.

அப்போது ராஜேஷ் கண்ணா அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்து ஆபாசமாக பேசியுள்ளார். இதனை கண்டித்த பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்துவிட்டு ராஜேஷ் கண்ணா அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ராஜேஷ் கண்ணாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.