குடிமகன்கள் குடித்துவிட்டு போதையில் வீடு திரும்ப முடியாமல் சாலையில் விழுந்து கிடப்பதும், ஒருசிலரே போதையில் வாகனத்தை ஓட்டுவதால் விபத்துகளும் ஏற்பட்டு வருகிறது. இதனை தடுக்க ஒரு நாடு சூப்பர் முடிவை எடுத்துள்ளது. அதனபடி போதைக்கு அடிமையானவர்களுக்காக இத்தாலி அரசு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

குடிபோதையில் உள்ளவர்களை பாதுகாப்பாக வீட்டுக்கு அனுப்ப இரவு விடுதிகளில் வாகன சேவை தொடங்கியுள்ளன. இதற்கு எந்தக் கட்டணமும் கிடையாது என்பது கூடுதல் தகவல். சாலை விபத்துகளைத் தடுக்க இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும், முதற்கட்டமாக பல்வேறு நகரங்களில் உள்ள 6 இரவு விடுதிகளில் இது அமல்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது