
திருவள்ளூரில் ரூபாய் 200 கோடி செலவில் கல்வியில் திறன்மிகு மையங்கள், அறிவு சார் தொழிலகங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய தமிழ்நாடு அறிவுசார் நகர் அமைப்பதற்கான நிலம் எடுப்பு பணி ஆனது தொடங்கப்பட்டுள்ளது. மேல்மாளிகைபட்டு கிராமத்தில் 17 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த முதல் நிலை அறிவிப்பு வெளியானது.
இது தொடர்பாக ஆட்சேபனை இருந்தால் மாநெல்லூர் சிப்காட் தொழில் பூங்கா மாவட்ட வருவாய் அலுவலரிடம் சமர்ப்பிக்கலாம். இதுகுறித்து ஆகஸ்ட் 22 விசாரணை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.