ராஜஸ்தான் மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டு வரும் ஓய்வூதிய தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்த நிலையில் 2023-24 வருடத்திற்கான பட்ஜெட் தயாரிப்பதற்கு முதல்வர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்று திறனாளிகளுக்கான சிவில் சமூக குழுக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து வேலைவாய்ப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் தனியார் கல்லூரிகளில் பார்வையற்றவர்களுக்கான சிறப்பு கல்லூரி தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு 2023-24 ஆம் வருடத்திற்கான மாநில அரசின் பட்ஜெட்டின் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியத் தொகை 1500 ஆக உயர்த்துவது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று தகவல் கிடைத்துள்ளது.